கோவையில் உண்ணாவிரதப் போராட்டம்
துவக்கவுரையின் சுருக்கம் !
3.7.17 ஒரு மகிழ்ச்சிகரமான நாள். இன்று அதிகாலை இரண்டாவது பேரன் பிறந்த நாள். வாழ்த்துக்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றி. அடுத்த தொழிற்சங்க கடமையாற்ற உங்கள் முன்னே நிற்கிறேன். லாபம் இல்லை என்றால் ஊதிய மாற்றம் இல்லை என்ற III PRCயின் முடிவை மாற்றி 1.1.17 முதல் ஊதியம் பெற்றிட நமது தேசியபோரம் போராட்டகளம் அமைத்துள்ளது. 1 . 1. 2007 முதல் ஊதிய மாற்றம் பெற்றிட அப்போது அங்கீகாரம் இல்லாத போதும் பெருமுயற்சி மேற்கொண்டோம். 78.2 சத அடிப்படையில் ஊதிய உயர்வு பெற தொடர்ந்து போராடிப் பெற்றோம். தற்போது அங்கீகார உரிமையோடும் கூட்டணி சாங்கங்களின் பேராதரவோடும் ஊதிய மாற்ற கோரிக்கையை முன் எடுத்துச் செல்கிறோம்.ராணுவத்தில் போரின் போது எதையும் எதிர்கொள்ளும் துணிவோடு செல்லும் முன்னணி படைக்கு Caravan என்று பெயர். நாம் அந்த கேரவனாக இருந்து போராடி ஊதிய மாற்றத்தை பெறுவோம். இன்று நாம் எதிர்பாராத செய்தி வந்துள்ளது. BSNLEU அகில இந்திய சங்கம் நமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளதோடு அந்த சங்கத்தின் நிர்வாகிகள் நமது போராட்ட பந்தலுக்கு வந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.அதன் அடிப்டையில் மாநிலச் செயலர் வர உள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறோம்.
No comments:
Post a Comment