நன்றி! மிக்க நன்றி !!
இரண்டு நாள் உண்ணாவிரதப் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
நாடெங்கும் ஒன்றுபட்ட போராட்டத்ததிற்கான பேரெழுச்சியை நமது
போராட்டம் உருவாக்கி உள்ளது என்றால் அது மிகையாகாது.
கோவை மாவட்டத்தில் அதனை வெற்றிகரமாக்கும் வகையில் இரண்டு
நாட்களும் பங்கேற்ற தோழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
வாழ்த்துரை வழங்கி உரை நிகழ்த்திய அனைத்து சங்கத் தலைவர்களுக்கும்
நன்றி.
தலைமை ஏற்று நடத்திய SEWA BSNL மாவட்டத் தலைவர்
தோழர் A.சங்கர் அவர்களுக்கும் அந்த அமைப்பின் தோழர்களுக்கும்
தோழர் A.சங்கர் அவர்களுக்கும் அந்த அமைப்பின் தோழர்களுக்கும்
நன்றி.
இரண்டு நாட்களும் உழைத்த தோழர்கள் அனைவருக்கும் நன்றி.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு
என்று திருவள்ளுவர் நட்புக்கு இலக்கணம் வகுத்துள்ளார். எனது
35 ஆண்டு நண்பர் ராபர்ட்ஸ் அந்த வகையில் எனக்கு பேராதரவு
கொடுத்து வருகிறார். இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்கியதில்
அவரது பங்கு முக்கியமானது. அவருக்கு எனது தனிப்பட்ட நன்றியை
உரித்தாக்குகிறேன்.
----நன்றியுரையில் மாவட்டச் செயலர் எல்.எஸ்
No comments:
Post a Comment