Friday, April 14, 2017

மாற்றல் திட்டத்தை   மறுபரிசீலனை செய்ய வேண்டும் !
   -- கருத்தரங்கில் மாவட்டச் செயலர்  L.S. உரை !

Image may contain: 6 people, people sitting and table


13-4-17 அன்று  புதிய  PGMஆக பொறுப்பேற்றுள்ள திரு சுந்தர் 
உள்ளிட்ட முக்கிய  அதிகாரிகள் பங்கேற்ற கருத்தரங்கத்தில்
அறிமுக உரை ஆற்றிய மாவட்டச் செயலர் எல்.சுப்பராயன்,
தற்போதைய சூழலில் சுழல் மாற்றல் கொள்கையை கோவை
மாவட்டத்தில் அமலாக்கும் திட்டத்தில்   மறுபரிசீலனை தேவை
என்பதை  விளக்கமாக எடுத்து உரைத்தார்.

1. வால்பாறைக்கு டென்யூர் மாற்றலில் செல்பவர்களின் கஷ்டம்
சொல்லி மாளாது. ஆகவே, அதிகாரிகளுக்கு hard tenure போல
ஊழியர்க்கும் டென்யூர் காலத்தை ஓராண்டாக குறைக்க
வேண்டும்.

2. டெலிகாம் டெக்னீஷியன் ஊழியர்க்கு 2010லிருந்து சுழல் மாற்றல்
அமலாக்கப்படுகிறது. மாற்றலில் வெளியூர் சென்ற ஊழியர்கள்,
 இரண்டு ஆண்டுகள் முடிந்தவுடன் விருப்ப மாற்றல் பெற்றனர்.
சென்ற ஆண்டு புதிய உத்திரவின்படி சுழல் மாற்றல் அமலாக்கப்
பட்டது . கார்ப்பரேட் அலுவலக உத்திரவில்  மூன்றாண்டு என்று 
கால நிர்ணயம் உள்ளது. நமது மாவட்டத்தில் இரண்டு ஆண்டு 
என்பது எல்லோராலும் ஏற்கப்பட்ட ஒன்று. ஆகவே இரண்டு 
ஆண்டு என்பதே தொடர வேண்டும்.  மேலும்  பெரும்பாலான 
ஊழியர்கள் பணி ஓய்வுக் காலத்தை நெருங்கி உள்ளனர். 
ஆகவே, சுழல் மாற்றல் பற்றி  பரிசீலனை தேவை. மாற்று 
திட்டத்தை உருவாக்க வேண்டும்.

3. Sr.TOA / TTA  ஊழியர்க்கு 2008லிருந்து  சுழல் மாற்றல்கள் 
அமலாக்கப்படுகின்றன. பற்றாக்குறையை  சமன்படுத்த
வேண்டும் என்ற அடிப்படையில் நகரத்திற்குள்ளேயே 
பில்டிங்க்  to பில்டிங்க் மாற்றல் அமலாக்கப்பட்டன.  
9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது  அந்த சூழ்நிலை 
அடியோடு மாறிவிட்டது. மாதாமாதம் 10க்கும் மேற்பட்ட 
Sr.TOA  ஊழியர்களின் பணி ஓய்வின் காரணமாக ஒவ்வொரு 
செக்ஷனிலும் ஒரிருவர் பணியாற்றும் சூழ்நிலை. 
பற்றாக்குறை எல்லா பகுதிகளிலும் சமமாகிவிட்டது 
மட்டுமல்ல.... acute ஆகிவிட்டது என்பதே யதார்த்தம். 
 90 சத ஊழியர்கள் 2 அல்லது 3 ஆண்டுகளில் பணி ஓய்வு 
பெறும் நிலை ஏற்ப்பட்டு உள்ளது. ஆகவே Building to Building 
மாற்றல் தேவையற்றதாகிவிட்டது.

    மொத்தத்தில் மாற்றல் திட்டத்தில்   ஒரு முழுமையான
மறு பரிசீலனை தேவை என்று மாவட்டச் சங்கம் 
வலியுறுத்துகிறது.

4. பெரியநாயக்கன்பாளையம் CSC அமைந்துள்ள கட்டிடத்தின் 
 கடும் வெப்பம் காரணமாக அதில்  பணியாற்றும் ஊழியர்கள்
கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். உடனடியாக  CSC  இடம்
மாற்றப்படவேண்டும்.

No comments:

Post a Comment