நமக்கு நாமே நல நிதித்திட்டம்
BSNL தலைமையகம் தனது 19/04/2017 தேதியிட்டக் கடிதத்தில்...
பணியில் இருக்கும்போது இறக்கும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக BENEVOLENT FUND
நலநிதி ஒன்றைத் துவக்க இருப்பதாகவும்...
அந்த நலநிதி முழுக்க முழுக்க ஊழியர்களின்
பங்களிப்பில் உருவாக்கப்படும் என்றும்...
இது சம்பந்தமாக அதிகாரிகளைக்கொண்ட
குழு ஒன்று பரிசீலிக்கும் என்றும்...
நலநிதியை எவ்வாறு கையாள்வது....
மாதந்தோறும் ஊழியர்களிடம்
எவ்வளவு தொகை பிடித்தம் செய்வது…
நலநிதியாக எவ்வளவு தொகை வழங்குவது...
என்ற தங்களது கருத்துக்களை தொழிற்சங்கங்கள்
01/05/2017க்குள் அதிகாரிகள் குழுத்தலைவருக்கு
தெரியப்படுத்த வேண்டும் எனவும் BSNL நிர்வாகம் கூறியுள்ளது.
முதலில் இப்படியொரு குழு அமைக்கப்பட்டதே யாருக்கும் தெரியாது..
இது போன்ற பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர் தரப்பு அடங்கிய இருதரப்புக்குழு அமைப்பதுதான் சரியான முறையாகும்…
ஊழியர் தரப்பின் கருத்துக்களை மட்டுமே கேட்டு முடிவெடுப்பது சரியான ஜனநாயக நடைமுறையாகப் படவில்லை...
இறந்து போன ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி கொடுப்பதைக் கைவிட்டு விட்டு ஏதேனும் நலநிதியைக் கொடுத்து அவர்களைச் சரிசெய்து விடலாம் என்று நிர்வாகம் நினப்பதாக ஊழியர்களுக்கு தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது....
இதனைப் போக்குவது நிர்வாகத்தின் கடமை…
நலநிதி சம்பந்தமாக நமது கருத்துக்கள் இவைதான்…
நலநிதி கருணை அடிப்படைப்பணிக்கு மாற்றாக இருக்க முடியாது….
தற்போது ஏறத்தாழ இரண்டு லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
மாதம் ரூ.100/- பங்களிப்பு செய்தால்
மாதம் இரண்டு கோடி ரூபாயும்…
ஆண்டிற்கு 24 கோடி ரூபாயும் நலநிதியாகத் திரட்ட முடியும்.
தற்போது பணிக்கொடை அளவு 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே பணியில் இருக்கும்போது இறக்கும் ஊழியருக்கு
இருபது லட்சம் நலநிதியாக வழங்க வேண்டும்…
கருணை அடிப்படையில் பணி பெற்றவர்களுக்கு
குறிப்பிட்ட நலநிதித்தொகையும்...
கருணை அடிப்படையில் பணி கிடைக்காதவர்களுக்கு
கூடுதல் தொகையும் வழங்கப்பட வேண்டும்..
இறந்து போன ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட வேண்டிய
வங்கிக்கடன், கூட்டுறவு சங்கக்கடன் மற்றும் இதரக்கடன்கள் கணக்கில் கொள்ளப்படவேண்டும்…
தற்போது ஆயுள் காப்பீடாக LICயில் ஊழியர்களுக்கு மாதம் ரூ.105/- பிடித்தம் செய்யப்பட்டு இறந்தால் ஒருலட்சம் வழங்கப்படுகிறது.
இது மிகக்குறைவான தொகையாகும்.
எனவே ஆயுள் காப்பீட்டு அளவுத்தொகை
5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்.
ஊழியர் தரப்பையும் உள்ளடக்கி குழு அமைத்து...
உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால்...
நமக்கு நாமே நலநிதித்திட்டம் இறந்து போகும் ஊழியர் குடும்பங்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும்.
சாக்காடு கண்ட ஊழியரின் வாரிசுகளுக்கு...
உண்மையான நோக்கோடு.... உதவி புரியும் நோக்கோடு...
இந்தத்திட்டம் முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும்...
No comments:
Post a Comment