Friday, March 4, 2016

   வெற்றிக்கு கட்டியம் கூறிய  பாட்னா 
        தேசிய  செயற்குழுக் கூட்டம் 



மார்ச் 1, 2 2 தேதிகளில் பீகார் மாநிலத்தின்  தலைநகரம் 
பாட்னாவில் நடந்த  NFTE-BSNL   சங்கத்தின்    விரிவடைந்த 
தேசிய  செயற்குழுக் கூட்டம்  மிகுந்த  உற்சாகத்துடன் 
 நடந்தது.

  2002லிருந்து BSNLEU சங்க கூட்டணியில்  இருந்த சங்கங்கள்,
அச்சங்கத்தின் 12 ஆண்டு கால அங்கீகார கால செயல்பாடின்மை
மற்றும் சரண்டர் கொள்கை காரணமாக அந்த கூட்டணியிலிருந்து
விலகி,  நமது சங்கத்தின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று
நமது சங்கம் அடுத்த அங்கீகாரத்  தேர்தலில் வெற்றி  பெற வாழ்த்தியது
செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மகிழ்ச்சியையும்
உற்சாகத்தையும் அளித்தது.

TEPU  சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் சுப்பராமன்,   SEWA-BSNL 

பொதுச் செயலர் தோழர் N.D.ராம்,  NFTBE சங்க பொதுச் செயலர்
தோழர் கோலி, தோழர் சஜ்வானி,  BSNLMS  சங்க பொதுச் செயலர்
தோழர் சுரேஷ் குமார் ஆகியோர் வாழ்த்தி  உரையாற்றினர்.

 ஊழியர் நலன்,  நிறுவன நலன் ஆகிய இரண்டையும் பாதுகாக்க
7-வது அங்கீகாரத் தேர்தலில் நமது சங்கத்தை முதன்மைச் சங்கமாக
வெற்றி வாகை சூட வைத்திட வேண்டும் என்ற  உத்வேகத்துடனும்
உறுதியுடனும் நிறைவடைந்தது பாட்னா செயற்குழுக் கூட்டம்.





     



















                  







No comments:

Post a Comment