தோழர் அபிமன்யூக்கு அடி மேல் அடி
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
கடந்த தேர்தலில் BSNLEU சங்கத்தால் கையாளப்பட்ட பிரித்தாளும் சூழ்ச்சி
இந்த தேர்தலில் முடிவுக்கு வருகிறது.
NFTE மற்றும் FNTO சங்கங்களை உடைக்க எடுத்த முயற்சி தோல்வியை
தழுவியது நாம் அனைவரும் அறிந்ததே. TEPU சங்கம், அவர்களின் பிடியில்
இருந்து முழுமையாக விலகி உள்ள நிலையில் தோழர் அபிமன்யூக்கு
மேலும்
ஒரு அடி விழுந்துள்ளது.
SEWA - BSNL அமைப்பின் தேர்தல் 28-03-2016 ல் புது தில்லியில் BSNL நிர்வாகம் நடத்தியதில் P.N. பெருமாள் மற்றும் N.D. ராம் அவர்களை தலைமையில் உள்ள
அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நல சங்கத்தில் தலையிட்டு இரவீந்தரன் தலைமையிலான அணிக்கு ஆதரவு கொடுத்து
அவர்களை துண்டாட அபிமன்யூ எடுத்த முயற்சி தோல்வியை தழுவியுள்ளது.
இது அபிமன்யூ அவர்களுக்கு ஏற்பட்ட நேரடியான தோல்வியாகும்.
ஓய்வூதிய சங்கத்தை உடைத்த ஒரு பெருமை மட்டுமே இன்றைக்கு அவர்கள்
கையில் உள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.
10.05.2016 ல் நடைபெறும் 7வது சங்க சரிபார்ப்பு தேர்தலில் மேலும் ஒரு
தோல்விக்கு அபிமன்யூவும் BSNLEU சங்கமும் தயாராகட்டும் !
வெற்றி பெற்ற சகோதரர். P.N. பெருமாள் N.D. ராம் அவர்களை மனதார
பாராட்டுகிறோம். அவர்களின் பணி மேலும் தொடரட்டும்.
No comments:
Post a Comment