Saturday, March 12, 2016

                                      
                            இந்த நாள் இனிய நாள்

இன்று ராஜவீதி தொலைபேசி நிலையத்தில் பணியாற்றும் 
தோழர் சந்திரன் அவர்களின் மகள் விஜயலட்சுமி
அவர்களின் 27 வது பிறந்த நாள்.

கடந்த 10 ஆண்டுகளாக அவர் தனது பிறந்த நாளை
வித்தியாசமாக கொண்டாடுகிறார்..

இவ்வருடமும் அதே போல மாற்று திறனாளி குழந்தைகள்
உள்ள கருணை இல்லத்தில் அக்குழந்தைகளுக்கு அன்னதான்ம்
வழங்க ஏற்பாடு செய்து எங்களை அதில் பங்கேற்க வேண்டும்
என்று அழைத்தார். 
தோழர்கள் ராபர்ட்ஸ், மாரிமுத்து ஆகியோருடன்  சென்று                                                  அந்த குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கிவிட்டு                                  அவர்களுடன் அமர்ந்து மதிய உணவை உண்டது மகிழ்ச்சியான                                      தருணம்.

விஜயலட்சுமியின் கருணைப் பணி பல்லாண்டுகள்
தொடர வாழ்த்துக்கள்.
இதை நம்மில் பலரும் பின்பற்றலாமே ?





No comments:

Post a Comment