Wednesday, May 18, 2016

              
தோழர் மாலியை  வாழ்த்துவோம் !
              

இன்று மே 18.
தோழர் மாலி பிறந்த தினம்.

நேற்று மே 17
தோழர் ஜெகன் பிறந்த தினம்.

17க்குப் பிறகு 18.

நிச்சயமாக இது ஒரு
உண்மையை உணர்த்துகிறது.

தோழர் ஜெகன் காலத்திலிருந்து
NFPTE மற்றும் NFTE இயக்கத்தின்
வளர்ச்சிக்கு தன்னை முழுமையாக
அர்ப்பணித்தவர் தோழர் மாலி.

இயக்கத்தில் சிக்கலா
இயக்கத்திற்குள் சிக்கலா
அனைத்தையும் தீர்க்க வழிகாணும்
தோழனாக மாலி செயல்பட்டார்.

கொண்ட கொள்கையில்
தெளிவோடும் உறுதியோடும்
வாழும் தோழன்.


நிறைகளை மனம் திறந்து
பாராட்டும் பண்பாளர்.

குற்றம் என்றால் அதைச்
செய்தவர் யார் எனினும்
முக்த்துக்கு நேராகச்
சொல்லி விடும் பண்பு மிக்கவர்.

தனக்குத் தீங்கு இழைத்தோரையும்
மன்னிக்கும் மனம் படைத்தவர்.

தோழர் மாலி இன்னும் பல ஆண்டு வாழ வேண்டும் என மாவட்டச் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment