Thursday, January 12, 2017

                                           செலக்ட்டிவ் அம்னீஷியா !

 " சமீபத்தில் எழுத்தர்/இயக்குனர்களுக்கு நிர்வாகம் சுப்பனின் 
ஆசீர்வாதத்துடன் கட்டாய மாற்றல் உத்தரவு இட்டது".

பதவி இழந்த அதிர்ச்சியில் மனச் சிதைவு நோய்க்கு ஆளானவர் 
கிளப்பும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும்  அவருக்குத்தான் பொருந்தும்.

2008ல் தோழியர் LD ,  L.சுப்பராயன்,  SSG உள்ளிட்ட 80க்கும் 
மேற்பட்ட Sr.TOA  ஊழியர்க்கு சுழல் மாற்றல் போடப்பட்டது.

அதன்பிறகு இருமுறை சுழல் மாற்றல் அமலாக்கப்பட்டது.
 நூற்றுக்கும் மேற்பட்ட Sr.TOA ஊழியர்கள்   மாற்றப்பட்டனர். 
ராமகிருஷ்ணன் பாணியில்  " இவர்கள்  எல்லோரும் அவரால் பழிவாங்கப்பட்டவர்களா ?"

ராமகிருஷ்ணன் பொறுப்பேற்றவுடன்  SSX, CTMX  மூடப்பட்டு 
100க்கும் மேற்பட்ட  Sr.TOA  P   தோழியர்கள் மாற்றப்பட்டனர்.  

இவர்கள் எல்லோரும் அவரால் பழிவாங்கப்பட்டவர்களா ?  

2010லிருந்து எத்தனை எத்தனை போன்மெக்கானிக் ஊழியர்கள் 
வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் பல தொலைதூர
ஊர்களுக்கு மாற்றப்பட்டனர்.

இவர்கள் எல்லோரும் அவரால் பழிவாங்கப்பட்டவர்களா ?

 இவருக்கு மாற்றல் பெற,   Fault Controlல்  T.M  ஊழியர்க்கு 
வேலை  ஏதுமில்லை, ஆட்பற்றாக்குறை உள்ள Out door   பகுதிக்கு 
மாற்றுங்கள் என்று இலாகா மீது மிகவும் அக்கறை உள்ளது போல 
நடித்ததை என்ன வென்று அழைக்க ?

21/4/2015 BSNL ஊழியர்கள்/ அதிகாரிகள் நாடெங்கும்   இரண்டு நாள் 
வேலை நிறுத்தத்தை துவங்கிய நாள்.அன்று மாவட்டச் செயலராக, 
போரம் தலைவராக இருந்த இவர் என்ன  செய்து கொண்டு இருந்தார் 
என்பதை இந்த மாவீரரின் மனசாட்சிக்கே விட்டு  விடுகிறோம் ........    

15/9/16 அன்று எங்கள் யாருக்கும் தெரியாமல் கோவை 
பொது மேலாளர் அவர்களிடம் மாநிலச் செயலர் உங்களை 
சந்திக்க விரும்புகிறார் என்று பொய் சொல்லி அழைத்துச் 
சென்று அவர் முன்னிலையில் பேசியது என்ன ? தன்கூட
 பணியாற்றிய ஊழியர்க்கு குறைவான தண்டனை 
கொடுத்தீர்களே ...... என்று காட்டிக் கொடுத்தது யார் ? 

அடுத்தநாளே சென்னை  நிரந்தரத்  தலைவரிடம் மாநிலச் செயலரைப்பற்றி சொன்னது என்ன ?

நிமிடத்திற்கு நிமிடம்  தனது நிலைபாடுகளை மாற்றி மாற்றி  
பேசுவது   யார் ? ஏன் ?   

தன் மீது இத்தனை குறைகளை வைத்துக் கொண்டு, மாவட்டச் 
செயலர், மாவட்டத்  தலைவர் மீது வீண் பழி சுமத்துவது ஏன் ?

அவரை நினைத்தால் பரிதாபமாகத்தான் உள்ளது. 

என்ன செய்தால் பித்தம் தெளியுமோ !  
  

No comments:

Post a Comment