Sunday, January 8, 2017

                                         No automatic alt text available.


                                                  No automatic alt text available.



                                            NFTE-BSNL 
                      கோவை மாவட்டச் சங்கம்   
                              துரோகத்தை புறந்தள்ளுவோம் !
NFTE சங்க பதாகையை உயர்த்திப்   பிடிப்போம் !

எண்ணற்ற சாதனைகள் செய்த  NFTE சங்கத்தில் உறுப்பினராக
 உள்ளதை பெருமையாக கருதுபவர்கள் நாம். 

மாற்று சங்கத்தினர் பல்வேறு அவதூறு பிரச்சாரங்களை செய்த

போதும், அவற்றை புறந்தள்ளி வாழ்வளித்த சங்கத்தின் 
பதாகையை உயர்த்திப்பிடிப்பவர்கள் நாம் !

2005ல் ராமகிருஷ்ணன் மாவட்டச் செயலர் ஆனவுடன் 

VRC தலைமையில் பலர் சங்கத்திலிருந்து விலகியபோது, 
யார் போனாலும் எனக்கு கவலையில்லை, நான் சொல்வதைக் கேட்பவர்கள்  இருந்தால் போதும் என்று கூறிய ராமகிருஷ்ணன்,
 6-1-2017 அன்று நமது சங்கத்திலிருந்து  விலகுவதாக அறிவித்து
உள்ளார். 

 10 ஆண்டுகள் கோவை மாவட்ட சங்கத்தின் மாவட்டச் செயலர் பொறுப்பில் இருந்தவர்.   கடந்த 5 ஆண்டுகளில் அவரது 

தன்னிச்சையான செயல்பாடுகள் காரணமாக அவரால் மீண்டும் மாவட்டச் செயலர் ஆக முடியவில்லை.

அவர் மாவட்ட செயலராக இருந்தபோது அவரது அணுகுமுறையோடு  கருத்துவேறுபாடுகள் இருந்தபோதும், சங்க நலன் கருதி அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். 


தான் மாவட்ட செயலர் இல்லை என்று முடிவானவுடன், 
அதையெல்லாம் மறந்துவிட்டு மாற்று சங்கத்தோடு  ரகசிய  
உறவு  வைத்துக் கொண்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக  
நமது சங்கத்தை சீர்குலைக்க முயன்றார். 

ஒன்றுபட்டு செயலாற்ற வாருங்கள் என்று பலமுறை நாம் வேண்டுகோள் விடுத்தோம்.  அதை ஏற்காமல் தன்னை மீண்டும் மாவட்டச் செயலர் ஆக்கினால்தான் ஒத்துழைப்பேன், இல்லை 

என்றால் சங்கத்தை உடைப்பேன்  என்று கூறிக்கொண்டு,   
என்ன கொடுத்தும் ஒற்றுமை என்னையே கொடுத்தும் ஒற்றுமை 
என்று  ஒற்றுமைகீதம் வாசித்த நமது  ஒப்பற்ற தலைவர் O.P.குப்தா அவர்களின் நினைவு நாளன்று துவங்கி   நமது உறுப்பினர்களிடம் 
சென்று NFTE சங்க உறுப்பினர் விலகல் கடிதத்தை நிர்வாகத்திற்கு தாருங்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். 

அவரது இச்செயல், தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்க்கு துரோகம் செய்வதற்கு ஒப்பாகும்  

  
நமது உறுப்பினர்கள் ராமகிருஷ்ணனின் விஷம பிரச்சாரத்திற்கு ஆளாகாமல், நமது  உயிர் மூச்சாம்  NFTE சங்கத்தின் பதாகையை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

       A.ராபர்ட்ஸ்                                                            L.சுப்பராயன்

மாவட்டத்  தலைவர்                                       மாவட்டச் செயலர் 
                                                        
சங்க 

No comments:

Post a Comment