Tuesday, January 24, 2017

Image result for மெரினா போராட்டம்
போராட்டங்களும்
போதனைகளும்
ஒவ்வொரு போராட்டமும் மூன்று விளைவுகளை உருவாக்கும்.
1. வெற்றி
2. தோல்வி
3. படிப்பினை.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தோல்வி என்று சொல்வதற்கு இம்மியளவும் காரணம் இல்லை.

இந்தப் போராட்டம் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கிடைத்திட்ட வெற்றி என பெருமிதம் கொள்வதில் இருவேறு கருத்துக்கள் இருக்க நியாமில்லை.

மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயம் உரிமைக்காகவும், நியாய்த்திற்காகவும் அறவழியில் அமைதியாகப் போராடும் என்பதை உலகுக்குகு உரக்கச் சொலியிருக்கிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் நடத்திய மொழிப்போர் வரலாற்றை கேட்டிருக்கிறோம். படிதிருக்கிறோம்.
"1968 மொழிப் போராட்டத்தின்போது, அன்றைய முதல்வர் அண்ணா மாணவர்களுடன் ஐந்து இரவுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது நினைவுக்கு வருகிறது." என்று 24.01.2017 இந்து தமிழ் நாளிதழில் திரு சமஸ் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது ஏன் அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றிருக்கக் கூடாது?         அப்படி நடந்திருந்தால் ஆளுவோருக்கும் பெருமை கிடைத்திருக்கும். ஒரு வேளை ஆளுவோர் போராட்டத்தை அவ்வாறு முடிக்க விரும்பாமல் வேறு வழியில் முடிக்கத் திட்டமிட்டார்களோ என்னவோ?

ஆனால் ஒன்று நிச்சயம். இந்தப் போராட்டம் நிச்சயமாக வரும் காலத்தில் தமிழகத்தில் ஒரு புதிய வரலாற்றை எழுதும்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் மகோன்னதமானது. இந்தப் போராட்ட காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே நமக்குக் கிடைத்த பெருமை.

No comments:

Post a Comment