Sunday, January 15, 2017

                              மறக்க முடியாத நிகழ்வு !
எனது தொழிற்சங்க  நுழைவைப் பற்றி ராம்கி  அவரது முக நூலில் முழுமையாக     எழுதாத காரணத்தால் இதை எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.    

நான் 21/6/79 அன்று குன்னூரில் பணியில் துவங்கிய அன்று பார்த்த 
duty 16.40 duty.  அன்று இரவு 9 ணிக்கு  duty முடிந்தவுடன் என்னுடன் 
பணியாற்றிய தோழர் K.S. கோபாலகிருஷ்ணன், அவரது அறைக்கு 
என்னை அழைத்துச்  சென்று அங்கு ஒரு  கட்டில் மெத்தைஆகியவற்றை  
எனக்கு ஒதுக்கி தங்க வைத்தார். அடுத்த நாள் அந்த லாட்ஜ் ஓனரிடம் 
சென்று என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அந்த மாதம் சம்பளம் வந்தவுடன் என்னிடம் FNPTO  சங்கத்திற்கு 
சந்தாவை பெற்றுக் கொண்டார். புதியதாக இலாகாவில்  நுழைந்த 
எனக்கு சங்கங்கள் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.

 அதன் பிறகு   NFPTE  சங்கத் தலைவர்கள் இரண்டு அணியினரும்
என்னை  அணுகினர். நான் கல்லூரி நாட்களிலேயே  1975 முதல் 1979வரை 
 கோவை டவுன் ஹாலில் உள்ள  விக்டோரியா நூலகத்தில் ஜனசக்தி, 
தீக்கதிர் இரண்டையும் கூர்ந்து படிக்கும் வாய்ப்பு பெற்றவன். எனது 
கல்லூரித் தோழர் சுப்ரமணியம் என்னிடம் புதிய கலாச்சாரம் இதழை 
கொடுத்து படிக்கச் சொல்வார். அதனால் இரண்டு அணியினரின் 
கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு யோசிக்க துவங்கினேன்.


அப்போது குன்னூர் தொலைபேசி நிலையத்தில்  பணியாற்ற ஊழியர்கள் வெளியூரிலிருந்து   வந்து கொண்டிருந்தனர். அந்த ஊரில் இருந்த சில 
மூத்தவர்கள் அதை தங்களுக்கு சாதகமாக  பயன்படுத்தி வந்தனர். 
ஆட்பற்றாக்குறை காரணமாக  OT  வந்தால் முதலில் தங்களுக்கு 
போட்டுக் கொண்டு மீதமிருந்தால்தான் புதியவர்களுக்குபோடுவார்கள். 
அதுவும் தங்களுக்கு சாதகமான நேரத்திற்கு போட்டுக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு பாதகமான நேரத்திற்கு போடுவார்கள். தங்களுக்கு வேண்டியவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்... போகலாம் மற்றவர்களுக்கோ கடும் கட்டுப்பாடு.... 

இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க NFPTE  E 3 சங்கத்திற்கு புதிய கிளைச் 
செயலராக   தோழர் கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுக்க வேண்டும், 
அதற்கு உனது  ஆதரவு தேவை, சங்க உறுப்பினராக  சேர் என்று எனது 
உற்ற நண்பர்கள் கூறியதால் நான்   NFPTEல்  இணைந்தேன். கிளை 
மாநாட்டில் விவாதம் நள்ளிரவு வரை நடந்தது. நான் புதியதாக 
சேர்ந்ததால் எனக்கு வாக்குரிமை கொடுக்கக்கூடாது என்று  போஸ் 
அணியினர் வாதம் செய்தனர். நான் வாய்ப்பு கேட்டு பேசினேன். இந்த 
சங்கம்தான் புரட்சிகரமான சங்கம் என்று இரண்டு அணியினரும் 
என்னை அணுகினீர்கள்..... ஆனால்  எனது வாக்குரிமை பற்றி இப்போது 
விவாதம் செய்து என்னை அவமரியாதை செய்கிறீர்கள். எனக்கு இந்த 
மாநாட்டில் வாக்குரிமை வேண்டாம். நான் இந்த சங்கத்தை விட்டு 
விலக மாட்டேன். அடுத்த மாநாட்டில் எனது வாக்குரிமையை முழு 
உரிமையோடு பயன்படுத்திக் கொள்கிறேன் என்று தெரிவித்தேன்.  
அவையோர்  பலத்த கைத்தட்டலோடு எனக்கு உற்சாகம் அளித்தனர். 
ஒரு சில நொடிகளிலேயே அவை என் பக்கம் திரும்பியது. சங்கத்திற்கு 
வந்த புதியவரை அவமதிக்கக் கூடாது.  எனக்கு வாக்குரிமை  அளிக்க  
வேண்டும்  என்று ஏகமனதாக முடிவானது.

நான் குப்தா அணியின் தேர்தல் ஏஜெண்டுகளில் ஒருவராக நியமிக்கப்
பட்டேன். குப்தா அணி அந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.
    
வெற்றி பெற்ற ஒரு சில நாட்களிலேயே  பழிவாங்கும் வகையில்
எனக்கு மெமோ கொடுக்கப்பட்டது. பிறகு அது கிளைச் சங்கத்தால்
தீர்க்கப்பட்டது. 

உடன் பணியாற்றியவர்கள் தோழர்கள் ராமலிங்கம், சுந்தரம் ஆகியோர்.
  

          

No comments:

Post a Comment