Monday, January 16, 2017

              செலக்டிவ் அம்னீஷியா நோய்க்கு   
      ஆளானவருக்கு   சில நினைவூட்டல்கள்  !
Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: 1 person


ராமகிருஷ்ணன் மாவட்ட செயலராக இருந்தபோது அவர் கையாலேயே 
எழுதிய செயல்பாட்டு அறிக்கையிலிருந்து  :

Image may contain: text

பதவி இல்லை என்ற ஆத்திரத்தில் தற்போது  முகநூலில் ராமகிருஷ்ணன் எழுதியுள்ளது :  

 " இம்மென்றால் பயந்து ஓடும் சுப்பனை இந்த மாவட்டம் முழுதும் அறியும்,
கைப்புன்னுக்கு கண்ணாடி தேவை இல்லை!! "

                                                                          
              நெஞ்சில் நின்ற சில போராட்டங்கள்  
              
                                S.T.R   ஊழியர்க்கான போராட்டம் 

 1994ஆம் ஆண்டு.....எனது வாழ்வில் முக்கியமான ஆண்டு...
எனது இரண்டாவது செல்ல  மகள் பிறந்த ஆண்டு மட்டுமல்ல...
கடுமையான சூழ்நிலையில் எனது  STR  கிளைச் சங்க 
உறுப்பினர்களை பாதுகாக்க வீறுகொண்டு போராடிய வருடம்.........

அப்போது  கோவை மாவட்டத்தில்  VRC கோலோச்சிய காலம்.
நமது தோழர்களை குறிவைத்து பழிவாங்கிய காலம். பல கிளைகள்
அவரது கட்டுப்பாட்டில்.  STR  போன்ற ஒரு சில கிளைகள் மட்டுமே.
நமக்கு ஆதரவாக. 
நான்  STR   E-4 லைன் ஸ்டாப் சங்க  கிளையின் செயலர்.

STR  ஊழியர்கள்  கவரக்கல் . குரங்குமுடி, வால்பாறை போன்ற
வன விலங்குகள் உள்ள காட்டுப் பகுதிகளில் கேசுவல் ஊழியர்களாக
 பணியாற்றி வந்தனர்.

 RM ஊழியர்கள் நிரந்தரத்தின்போது,  STR  பகுதி  ஊழியர்களை
கோவை மாவட்டத்தின் பகுதிகளில் போஸ்டிங் போடக்கூடாது
என்று நிர்வாகத்திடம்  தவறான  உடன்பாட்டை  போட்டார் 
மாவட்டச் செயலர் VRC. அந்த தவறான முடிவை எதிர்த்து 
PGM அலுவலகம் முன்உண்ணாவிரதம்   துவக்கினேன்.

 தோழர் ஜெகன்," பிரச்னை மிகவும் சிக்கலானது. எதிரியோ
பலமானவனவர்.  உண்ணாவிரதத்தை  5 அல்லது 6 நாட்கள் தொடரவேண்டியதிருக்கும்..... சாத்தியமா ? "   என்று கேட்டார்.
அது பற்றி கவலை இல்லை..... நியாயம் பிறக்க எத்தனை நாள் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் இருக்க தயார் என்று
கூறினேன்.

 இதற்கிடையே ,   VRC மாவட்ட   நிர்வாகத்தை சந்தித்து
போராடும்  எங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

மூன்றாம் நாள்,அதே மாவட்ட நிர்வாகம்,  மாநில சங்கத்தின் 
வலியுறுத்தலால், மாநில நிர்வாகத்தின் உத்திரவின் 
அடிப்படையில் மலைப்பகுதிக்கு சென்று  ST காலிடங்களுக்கு 
தகுதியான நபர்களை தேடிப்பிடித்து அவர்களை புதியதாக 
நியமித்து விட்டு அங்கு பணியாற்றி வந்த STR கேசுவல் 
ஊழியர்களை நிரந்தமாக்கி  கோவை  மாவட்ட  பகுதியில் 
போஸ்டிங்க் செய்தது.

அப்போதெல்லாம் ராமகிருஷ்ணன் எங்கே இருந்தாரோ
தெரியவில்லை !
------------------------------------------------------------------------------------------------------

 டெலிகாம் மெக்கானிக்காக   புதியதாக பதவி உயர்வு பெற்ற  
RM  ஊழியர்கள் எந்தவிதமான கணக்கீடுமின்றி  வெளியூருக்கு 
தூக்கி அடிக்கப்பட்டபோது, 

 " Part time GMஏ ....... பழிவாங்காதே ! பழிவாங்காதே ! லைன் ஸ்டாப் ஊழியர்களை பழிவாங்காதே !" என்று கோஷமிட்டு போராட்டத்தை
துவக்கிவைத்ததை பாவம் பதவி    இழந்த சோகத்தில் மறந்து விட்டார் ராமகிருஷ்ணன்.
-----------------------------------------------------------------------------------------------------------
  Image may contain: 2 people, people sitting
Image may contain: 5 people, people standing, people sitting and stripes
2005ல் ராமகிருஷ்ணன் மாவட்டச் செயலராக பொறுப்பேற்றவுடன்,
SDE  ராமநாதபுரம், T.Mech  தோழர் இளங்கோவிற்கு பழிவாங்கும் 
வகையில் இன்கிரிமெண்ட் கட் வழங்கினார்.  தொலைபேசியில் 
பேசும்போது ரத்து செய்வதாக கூறிவிட்டு  தண்டனை கடிதத்தை 
அஞ்சல் மூலம் அனுப்பி  ஏமாற்றிவிட்டார்  அந்த அதிகாரி என்ற  தகவலை தோழர் ராம்கி என்னிடம் கூறியவுடன் இதை 
அனுமதிக்கக் கூடாது,  நீங்கள் நேரடியாக  சென்று பேசிப் 
பாருங்கள்....... மறுத்தால் உடனடியாக உண்ணாவிரதத்தை துவக்குங்கள்..... நான் அனைவருக்கும் தகவல் கொடுத்து 
அழைத்து வருகிறேன் என்று கூறி ஒரு சில மணித்துளிகளில் ராபர்ட்ஸும் நானும்   நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களை திரட்டி போராட்டத்தை  வெற்றிகரமாக்கியதை மறந்து விட்டு பதவி  இழந்தவுடன் எங்களை அடிவருடிகள்   என்று எழுதும் நிலைக்கு    வந்துவிட்டார் ராம்கீ  ........
---------------------------------------------------------------------------------------------------------------

 நமது சங்கத்திற்கு    அங்கீகாரம் இல்லாதபோது,  வெயிட்டிங்க் லிஸ்டில் முதலில்  இருந்த நமது தோழியருக்கு மாற்றல் போடாமல்,  மாற்று சங்க ஊழியருக்கு மாற்றல் போட்டதை கண்டித்து DGM அலுவலக கிளைச் செயலரான  நான்  உடனடியாக சாய்பாபா காலனி DGM அறை   முன் உண்ணாவிரதம் துவங்கியதையும் தனது சொந்த வேலையை சிறிது
நேரம் ஒதுக்கி வைத்து வந்ததையும்  ராமகிருஷ்ணன்  மறந்தது  ஏனோ ?
----------------------------------------------------------------------------------------------------------

Image may contain: one or more people
Image may contain: 1 person

நிர்வாக அலுவலக மாற்றலின்போது  பாரபட்சமான  நிர்வாகத்தின்   போக்கை  எதிர்த்து சாய்பாபா தொலைபேசி நிலையத்தில் உண்ணாவிரதம் இருந்ததையும் மறந்து விட்டார்  ராம்கி.

----------------------------------------------------------------------------------------------------

Image may contain: 3 people, indoor

அவர் மாவட்டச் செயலரான பின் மெயின் தொலைபேசி நிலையத்தில்
 மூன்று ஆண்டுகளாக   தீர்க்கப்படா த பிரச்னைக்காக நான் உண்ணாவிரதம் இருந்ததையும் மாவட்டச் செயலரான இவர் கண்டும் காணாமல் இருந்ததையும் தற்போதைய பொது மேலாளருடன் நான் கடுமையாக வாதாடும்போது அதை தடுத்ததும் நான் மட்டுமே இது நாள்வரை அறிந்த செய்தி........

--------------------------------------------------------------------------------------------------------

      Image may contain: 9 people                                  No automatic alt text available.

ஏப்ரல் 21, 22, 2015 அன்று நாடெங்கும் உள்ள BSNL  ஊழியர்கள் கொதித்தெழுந்து போராடினார்கள்.அப்போது போரம் தலைவராக 
இருந்த ராமகிருஷ்ணன் போராட்ட களத்தில் இல்லாமல் எங்கள் யாருக்கும் தெரியாமல் தான் மீண்டும் மாவட்ட செயலர் ஆக
வேண்டும் என்பதற்காக  ரகசிய கூட்டத்தை  ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்............ 
-----------------------------------------------------------------------------------------------------------------


     வேண்டாம் விபரீதம் ......

அவர் மீதான இலாகா விசாரணைக்கு சென்னை தலைவரை எப்படி அழைத்தார்........... பிறகு அவரை விடுத்து புதியவரை சந்திக்க
செல்லும்போது நானும் கூட வரவேண்டும் என்று அழைத்த முறை
ஆகியவற்றை  விளக்கி  எழுத எனது மனம் ஒப்பவில்லை............

அகில இந்திய சங்கமே  BSNLEU சங்கத்தோடு ஒன்றுபட்ட
போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தாலும் நான் சேர்ந்து
செய்யமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவர்,   திடீரென்று 
அதன் ஊதுகுழலாக மாறியது எப்படி ?      

ராமகிருஷ்ணன் பாணியில், அவர்    RM  ஆவதற்கு முன்னும்
பின்னும், மாவட்ட செயலர்  ஆவதற்கு முன்னும் பின்னும்
இடையிலேயும்  நான் அறிந்தவற்றையும்,

லூர்துசாமி இவரை ஆட்டி வைத்த நிகழ்ச்சிகளைப் பற்றியும்,

மற்ற தலைவர்கள் இவரைப் பற்றி கூறியதையும் நான்
எழுதினால் இந்த பக்கங்கள் முடை  நாற்றம் எடுக்கும்.
அவற்றை எல்லாம்  எழுதி எனது தரத்தை தாழ்த்திக்
கொள்ள விரும்பவில்லை........

பதவி கேட்டு என் வீட்டுக்கே  வந்தவர்கள் யார் யார் என்ற 
ரகசியத்தையும் நான் வெளியிட விரும்பவில்லை.......  
    

No comments:

Post a Comment