Sunday, January 15, 2017

பொய்ப் பிரச்சாரமும் உண்மை நிலையும் 

தோழர் முருகேசன் மாவட்ட தலைவராக் இருந்தபோது 
இவருக்கு பெயரே ""சித்திரகுப்தன்"" என சூட்டினார்.


                                முகநூலில் ராமகிருஷ்ணன்........

தோழர் முருகேசன் என் மீது அன்பு மிக்கவர். எனக்கே உரிய பாணியில்
சிரித்துக் கொண்டே அவரிடம், எனக்கு சித்திரகுப்தன் என்று செல்லப் 
பெயர் வைத்தது ஏன் ? என்று கேட்டேன்.  அவர் கீழ்க்கண்ட பதிலை கூறி அதனால்தான் உனக்கு அந்த பெயரை வைத்துள்ளேன் என்றார். 


சித்திரகுப்தர்: பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்களினைப் 
பற்றிய முழு விபரங்களினையும் பதிவு செய்துவைப்பது இவர் தொழிலாகும்.
 மனிதர்கள் செய்யும் பாவங்கள் மற்றும் நல்ல செயல்களிற்கேற்றாற்போல 
பாவம் செய்யும் மானிடர்களை நரகத்திற்கும், நல்ல செயல்களைப் பின்பற்றுபவர்களினை சொர்க்கத்திற்கும் அனுப்பவல்ல சக்தியினை 
உடையவர் சித்ரகுப்தர். 

நம்பிக்கைகள்[தொகு]

  • உலகில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்துக் கணக்குகளையும் எழுதிப் பராமரித்து வருபவர் சித்திர புத்திர நாயனார்தான் என்பது இந்து சமய நம்பிக்கையுடையவர்களின் நம்பிக்கை. மேலும் ஒருவருடைய இறப்புக்குப் பின் இவருடைய கணக்கைப் பார்த்துத்தான் சொர்க்கம் அல்லது நரகம் போன்றவற்றில் இடமளிக்கப்படும் என்பதும் இந்து சமயத்தவர்களின் நம்பிக்கை.
  • நவக்கிரகங்களில் கேதுவுக்கு சித்திரகுப்தன்தான் அதிபதி என்றும் கேது தோசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், அத்தோசம் நீங்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.
  • சித்ரா பவுர்ணமி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளித்தால், அவர்களது பாவங்களை குறைப்பார் என்பதும் ஒரு நம்பிக்கை.

                                  

நமது மூத்த தோழர்களை சுப்பன்  அவமரியாதையாக விமர்சிப்பதால்,
நமது முன்னால் மாவட்ட செயலர்கள் அனைவராலும் 
வெறுக்கப்பட்ட நபர், 
1. மறைந்த தோழர் மாசானன்
                                      முகநூலில் ராமகிருஷ்ணன்........

அவர் காலமானதற்கு சில மணி நேரங்களுக்கு முன் நானும்
 ராஜவீதி தொலைபேசி நிலையத்தில் பணியாற்றும்  தோழர் 
மாரிமுத்துவும் கே.ஜீ மருத்துவமனை சென்று அவருக்கு ரத்தம்
வழங்கினோம். பரவசப்பட்ட தோழர், மாசானன் இவர்தான் 
சுப்பராயன் என்று அவரது மனைவி, தம்பி,மகள் ஆகியோரிடம் 
சிலாகித்து பேசியதை இன்றும் மறக்க முடியவில்லை.   நமது சங்கத்தில் எப்பொழுதுமே 2 வது இடத்தில் இவர்
தொடர்ந்து இருப்பார், அனைத்து மாவட்ட செயலர்களின்
குமாஸ்தாவாக பணியாற்றினார்.டைரியில் எழுதுவது, 
பேட்டிகளின் போது நமது மாவட்ட செயலர்களின் 
காதுகளில் மெல்ல சொல்வது என கைத்தடியாக இருந்தார்.
                                     முகநூலில் ராமகிருஷ்ணன்........
ஆம் ! நான் என்றுமே  என்னை முன்நிறுத்தி சங்கப் பணி 
ஆற்றியதில்லை. யார் மாவட்டச் செயலராக இருந்தாலும் 
அவருடன் இணைந்து பணி ஆற்றி உள்ளேன். அவர் மூலமே 
பிரச்னைகளை எடுக்க வேண்டும் என்று  உறுதியாக இருந்ததால்
அவர் மறந்தால் கூட அவர்  காதுகளில் மெல்ல சொல்வது எனது 
பாணி. ராமகிருஷ்ணனைப்போல் தான்தோன்றித்தனமாகவோ,
 தான் தான் என்று கருதியோ  தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் 
செயலரை அவமரியாதை செய்யும் விதமாகவோ  நடந்ததில்லை. 
அதை இன்றும் பெருமையாகவே கருதுகிறேன். 

நான் அனைத்து மாவட்ட செயலர்களுக்கும் துணையாக இருந்தேன் 
என்ற உண்மையை எடுத்துரைத்தமைக்கு நன்றி ! 

No comments:

Post a Comment