முகநூலில் தோழர் C.P.....
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை முதல் கன்யாகுமரி வரை மாணவ, மாணவிகளின், இளைஞர்களின் அறவழி போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது... கொங்குத்தலைநகர் கோவை வ.உ.சி மைதானத்தில் இளைஞர்களோடு் நானும் காலை 9.30 மணியில் இருந்து கலந்து கொண்டுள்ளேன்... என் வாழ்நாளில் இவ்வளவு பிரம்மாண்ட எழுச்சியை, உணர்ச்சிபூர்வமான விண்ணெதிரும் கோஷங்களைத்தாங்கிய அறவழி போராட்டத்தை கண்டதேயில்லை... காலையில் ஊடக செய்தியின்படி 8000 ஆயிரமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, நேரம் செல்லச்செல்ல கூடிக்கொண்டே வந்து மைதானமே கொள்ளாமல் அவினாசி சாலையிலும் மாணவர்கள் குவிந்தனர். லட்சக்கணக்கான மாணவ-மாணவிகளிம், இளைஞர்களும், எந்த ஒரு அரசியல் சாயம் இல்லாமல், பீட்டாவை தடை செய்ய வேண்டும், தமிழர்களின் கலாச்சார அடையாளமான ஜல்லுக்கட்டு தடையை நீக்கி, வாடி வாசலை திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்து, எழுச்சியுடனும், கட்டுப்பாடுடனும், உறுதியுடனும் போராட்டம் நடந்து வருகிறது... விண்முட்டும் கோஷத்தால், ஒற்றுமையால் இந்த போராட்டம் உட்சகட்டத்தை எட்டியிருக்கிறது... இனியும் ஒரு நிமிடம் கூட கால தாமதம் செய்யாமல் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும்...
No comments:
Post a Comment