Monday, January 9, 2017

                                   நரம்பில்லா நாக்கு
                     நாலும் பேசும்  !

     தங்களது சுயநலனுக்காக  ஒரு அமைப்பை உடைக்க  சதி 
செய்பவர்கள் தங்களது மனசாட்சியை அடகு வைத்துவிட்டு  
நிறைய பொய்களையும் கட்டுக் கதைகளையும் அவிழ்த்து 
விடுவார்கள்.
   
         தற்போது  ஒருவர்  அந்த நிலைதான்  உள்ளார்.............

மாவட்டச் செயலர்   பதவி     மீண்டும் கிடைக்காது என்ற 
ஆத்திரத்தில், கடந்த காலங்களில்  அவரை தாங்கிப்பிடித்த 
அனைவரையும் தனது ஆத்திரம் தீர,  சமூக வலைதளங்களில் 
தரம் தாழ்ந்து எழுதி வருகிறார்.    

 அவர் மாவட்டச் செயலராக இருந்தபோது, PGM திரு. ஹரிபாபு 
அவர்களிடம்   " தோழர் LS அவர்கள்தான் எங்களது Think tank " 
என்று கூறினார். இன்று  அவருக்கு  அதே சுப்பராயன், 
வெட்கங்கெட்ட மாவட்டச் செயலர் சுப்புவாக தெரிகிறார் !!

ஒரு சில  வாரங்கள் இவர் காணாமல் போனபோது 
ஆபத்பாந்தவனாக தெரிந்த சுப்பராயன், இன்று 
களவாணியாக, அடிவருடியாக தெரிகிறார்.


அலுவலக மாற்றல் பிரச்னையின்போது PGM அவர்களிடம்
தோழர் சுப்பராயன் ஆவேசமாக வாதம் செய்தபோது,
மெதுவாக  தொடையில் தட்டி, 

" ஏம்பா ! PGM சாரை   அடிக்கிற மாதிரி பேசறே, என் கேஸ் பெண்டிங்கல 
இருக்கறதை மறந்துட்டியா " 

 என்ற அந்த மாவீரருக்கு இன்று  அதே சுப்பராயன் 
" இம்மென்றால் பயந்து ஓடும் சுப்பனாக " தெரிகிறார்.,....


தனது எதிர்காலமே   பிரச்சனை ஆனபோது, 

" நான் உங்கூட வரமாட்டேன்,   நீதான் அந்த அதிகாரியிடம் தனியாக சென்று  எனது  பிரச்னையை சுமுகமாக தீர்க்க வேண்டும்" 

என்று மன்றாடியவருக்கு, இன்று அதே சுப்பராயன், அடிவருடியாக தெரிகிறார்.......

மாவட்ட செயலருக்கு முன்மொழிந்தபோது, மாவட்ட செயலர் பொறுப்புக்கு தகுதி வாய்ந்த நல்ல தோழனாக திகழ்ந்த
சுப்பராயன், அடுத்த நாளே ஒரு சிலரின் துர்போதனை  
காரணமாக  அவருக்கு துரோகியாக காட்சி அளிக்கிறார் !


30 ஆண்டுகள்  உற்ற நண்பனாக, வழிகாட்டியாக  
விளங்கியதாக   கூறப்பட்ட தோழர்  ராபர்ட்ஸ்  அவர்களுக்கு 
தற்போது  கிடைத்துள்ள அர்ச்சனை : 
நிர்வாகத்தை எதிர்த்து இதுவரை 30 ஆண்டுகளில் ஏதாவது 
ஆர்பாட்ட,  போராட்டமாவது நடத்தினாரா?? இந்த மாவட்ட 
தலைவர் ராபர்ட்???? சரித்திரத்திலேயும், பூலோகத்திலேயும் 
இல்லை!!! "

இதுபோல இன்னும் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம் !

இவருக்கு மாவட்டச் செயலர் பதவியை வழங்குகிறோம் என்று 
ஒரே ஒரு வார்த்தையை நாங்கள்  கூறிவிட்டால் போதும், 
உடனடியாக, " ஆத்திரத்தில் கூறிவிட்டேன்,இனி நீங்கள்தான் 
எனது தலைவர், வழிகாட்டி " என்றெல்லாம் மீண்டும்  கூறத் தயங்கமாட்டார்  நாஞ்சில்  ஜம்ப்பத்* பாணியில் .

         Image result for நரம்பில்லா நாக்கு


Image may contain: text
         



       

No comments:

Post a Comment