வாழ்க நலமுடன் ! வாழ்க வளமுடன் !!
எமதருமைத் தோழர் G.ஜெயராமன் 31.07.2016 அன்று பணி ஓய்வு பெறுகிறார். நமது ஒப்பற்ற சம்மேளனத்தின் அகில இந்தியச் செயலர்.
தமிழ் மாநில சங்கத்தின் ஆற்றல்மிகு முன்னாள் மாநிலப்பொருளர்.
முன்னாள் கடலூர் மாவட்டச்செயலர் என வரலாறு பல படைத்தவர்.
ஓய்விலாசூரியனாய் இயக்கப்பணியைத் தொடரும் தோழர் ஜி.ஜெயராமன் நமது தோழர்களின் இயக்க செயல்பாட்டுக்கு ஊற்றுக்கண். தனக்கு எத்தகைய பேராபத்து வந்தபோதும் நேர்மையற்ற நிர்வாகத்தின் ஓரம் சாராதவர்
தமிழ் மாநில சங்கப் பொருளராக இருந்தபோது சென்னை மாநகரில்
நமது மாநில சங்ககக்கட்டிடம் கம்பீரமாய் எழுந்து நிற்பதற்கு
ஆதாரமாகி உழைத்தவர்.
கடலூரில் தமிழ் மாநில நான்காம் பிரிவு சங்கத்தின் மாநாடு நிகழ்ந்தபோது NFPTE சங்கத்தின் செங்கொடி உயர்த்தி ஆனைமீது
அமர்ந்து வெற்றிக்கோஷமிட்ட சங்கப் பொறுப்பாளி.
கடலூரின் பெருமைமிகு தோழர்கள் தொழிற்சங்க வரலாற்றில்
தடம் பதித்த வழிகாட்டிகள் ரகு, ரெங்கனாதன் ஆகியோரின்
உற்ற தோழமை.
தோழர்கள் இடையே மேடை ஏறி பேச துவங்கிவிட்டால் தான் ஏற்றுகொண்ட கொள்கையை விவாதிப்பதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்.
தமிழின் பாசமிகு அரண். தமிழ் இலக்கியத்திற்கு தொழிற்சங்க அரங்கிலே குளிர் நிழல் ஈந்த ஒரு எடுத்துக்காட்டு. தமிழ் ஆழமாய் அறிந்த மார்கசீயவாதி. கடலூர் தமிழ்ச்சான்றோர்கள் பலரின் அன்பிற்குப் பாத்திரமானவர்.
ஒரு கவிஞர். வெளிச்சப்புள்ளிகள்- என்னும் கவிதைத்தொகுப்பு, வள்ளளலார் ஒரு சமூக ஞானி, மக்கள் பக்கம் வள்ளலார் -என்னும் உரை நடை நூல்கள் தந்தவர்.ஆழ்ந்த தமிழ் அறிவுப்பெட்டகம் புதுக்கவிதைக்காரர் ஞானக்கூத்தன் அவர்களால்'ஒரு நல்ல கவிஞர்' என பாராட்டப் பெற்றவர். நாமும் நமது தோழர் தமிழ்ப்பற்றினைப் போற்றி வணக்கம் சொல்வோம்.
தோழர் ஜெயராமன் அவர்களின் பணி ஓய்வுக் காலம் சிறப்புடன்
அமைய வாழ்த்துவோம் !