வேலூர் மாநில மாநாட்டில் சார்பாளர்/பார்வையாளர் தோழர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.
அனைவருக்கும் மிகச்சிறப்பான ஏற்பாடுகளை, உபசரிப்பை
வேலூர் தோழர்கள் கண்ணுறங்காது செய்திருந்தனர்.
வரவேற்புக்குழு பொதுச்செயலாளர் தோழர்.நெடுமாறன்
தலைமையில் மாவட்டச் செயலர் தோழர்கள் அல்லிராஜா,
சென்னகேசவன், மதியழகன் வெங்கடேசன் உள்ளிட்ட வேலூர் தோழர் அனைவரும் கருமமே கண்ணாய் கருத்தாய்
உழைத்தனர்.
தோழர்களுக்கு நம் பாராட்டுகளையும் நன்றியையும்
உரித்தாக்குகிறோம்.
அவர்களின் பணிக்கு எடுத்துக்காட்டு மாநாட்டுக்கு
முன்புதான் தோழர் அல்லிராஜாவின் குடும்பத்தில் மிகப்
பெரிய சோகம் இழப்பு.
அதன் சாயலே இல்லாமல் தோழர் மாநாட்டுப் பணியில்
பம்பரமாய் சுழன்றது அந்த செய்தி அறிந்தவர்கள் மனதில்
ஒரு விளக்க முடியாத நெகிழ்ச்சியை உருவாக்கியது.
தோழர் அல்லிராஜாவுக்கு நமது Red Salute.
வரவேற்புக்குழுவின் அத்துணை தோழர்களின் உழைப்புக்கு
தலைவணங்குகிறோம்.
No comments:
Post a Comment