வாழ்த்துவோம் ! மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் கந்தசாமி அவர்களை !
திருப்பூரில் மஸ்தூராய் இருந்த காலத்தில் இருந்து நமது சங்கத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியவர். 1986ல் நடந்த மஸ்தூர் நிரந்தரத்திற்கான போராட்டத்தின்போது அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
சிறிதும் அஞ்சாமல் தொழிற்சங்கப் பணியை தொடர்ந்தார்.
தோழர் ஜெகன் அவர்கள் பணி ஓய்வு பெற்ற போது, அப்போது தமிழக பொது மேலாளராக இருந்தவர் திரு ராஜகோபால்.
தோழர் ஜெகன் அவர்கள் மீது அவருக்கு இருந்த பெரும் மரியாதை காரணமாக தோழர் ஜெகன் அவர்களின் பணி ஓய்வை ஒட்டி அவர் மிகவும் விரும்பிய ஒரு சில பிரச்னைகளை தீர்ப்பதாக கூறி அவை
எவை என்று கேட்டார்.
அப்போது தோழர் கந்தசாமி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட 4 தோழர்கள்
கே.ஜீ போஸ் அணியின் தீவிர உறுப்பினர்கள். ஆனால் அதை
ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் தோழர் ஜெகன், அந்த நான்கு தோழர்களின் நிரந்தரமாக்கும் பிரச்னையை தீர்க்க வேண்டும்
என்று கேட்டுக்கொண்டார். அந்த நான்கு தோழர்களும் நிரந்தப்
படுத்தப்பட்டனர்.
துவக்ககாலம் முதல் சங்கத்தின் மீது தீவிர பற்றோடு செயல்படும் தோழர் மாநில சங்க நிரந்தர அழைப்பாளராக தேர்ந்தெடுக்கபட்டது
சாலச் சிறந்தது.
அவருக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துக்கள்

No comments:
Post a Comment