Thursday, July 14, 2016

       மனநிறைவை, மகிழ்ச்சியை  உருவாக்கிய 
          டெல்லி தேசியக் குழுக்  கூட்டம்    

தேசியக் குழுவின்  இரண்டாம் நாள் கூட்டத்தில் BSNL CMD பங்கேற்று வாழ்த்தினார்.

தமிழ் மாநிலச் செயலர் தோழர் பட்டாபிராமன், விளக்கமாக  
உரையாற்றினார். கடும் எதிர்ப்பு பிரச்சாரத்தை முறியடித்து 
நாம் பெற்ற அங்கீகாரத்தை அனைவரும் மகிழ்ச்சியுடன் 
கொண்டாட வேண்டும் என்று கூறினார். 

சென்னை மாநிலத்தில் படுமோசமான   எதிர்ப்பு பிரச்சாரத்திற்கிடையே
6 சதவீத கூடுதல் வாக்குகள் பெற்றதை குறிப்பிட்டு பேசி அனைவரும் 
அதை கைதட்டி வாழ்த்த வேண்டும் என்று கூற அவையில் இருந்த அனைவரும் கரகோஷத்துடன் அந்த வாழ்த்துரையை பகிர்ந்து 
கொண்டனர்.

தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாநில சங்கங்களிடையே கருத்து  மாறுபாடுகளை உருவாக்கிய
 STR  பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. வருங்காலத்தில் தமிழ் மாநில சங்கமும் சென்னை தொலைபேசி
 மாநில சங்கமும் ஒருங்கிணைந்து செயல்பட ஏதுவாக இந்த 
செயற்குழு  திருப்புமுனையாக அமைந்துள்ளது மனநிறைவை அளிக்கிறது.                                   
















No comments:

Post a Comment